வேளாண்மையும், கால்நடை
வளர்த்தலும்
முதன்மை தொழிலென
படித்தேன் அன்று ...
ஆனால் -இன்று
கணினியும்- அறிவியல்
தொழில் நுட்பமும்
முதன்மை என்ற நிலையில்
இவ்வுலகம்- நானோ
குழப்பத்தில்...
காரணம்-என்
நாட்டின் வளர்ச்சி
முதன்மையை நோக்கியா?
அல்லது
அடிப்படையை நோக்கியா?
என்று...